பாகிஸ்தான் நடிகைக்கு இந்திய ரசிகர் அனுப்பிய அந்த பரிசு - வைரலாகும் வீடியோ
பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளார்.
நடிகை ஹனியா
காஷ்மீர், பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் அளிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு, இந்திய ரசிகர் ஒருவர் தண்ணீர் பாட்டில்களை அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய ரசிகரின் பரிசு
நடிகை ஹனியா அமீருக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வீடியோவில், பாகிஸ்தான் நடிகையும், யூடியூபருமான ஹனியா ஆமிருக்கு ஒரு இந்திய ரசிகர் வாட்டர் பாட்டில் பார்சலை அனுப்புகிறார். இந்த பார்சலின் பாக்ஸில், இது ஹனியா ஆமிருக்கானது என்று எழுதப்பட்டுள்ளது.
Hania Aamir fans from India sending Water bottles to her 🤣🤣pic.twitter.com/7U2GCmPIEF
— Sunanda Roy 👑 (@SaffronSunanda) April 29, 2025
அதில் ராவல்பிண்டி, பஞ்சாப், பாகிஸ்தான் என்ற முகவரியும், கீழே ஃப்ரம் இந்தியா என்றும் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக இந்தத் தாக்குதல் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் வருத்தத்தை வெளிப்படுத்திய ஹனியா, "தாக்குதல் எங்கு நடந்தாலும் அது தவறுதான். சமீபத்திய தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களை நினைத்து என் மனம் வருந்துகிறது.
பரிதாபமாக உயிரிழப்புகள் ஏற்படும்போது, அந்த வலி அவர்களுக்கு மட்டும் அல்ல, அது நம் அனைவருக்கும் உண்டாகும். நாம் எங்கிருந்தாலும், துக்கம் ஒரே மொழியைப் பேசுகிறது. நாம் எப்போதும் மனித நேயத்தைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.