தாக்குதல் நடத்திய பயங்கரவாத மூளையாக பாக். முன்னாள் ராணுவ கமாண்டோ - அம்பலமான தகவல்
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் ல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூஸா உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைகள் குழு எனப்படும் படையில் பாரா கமாண்டோவாக பணியாற்றியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியவர்களுக்கு தளவாடங்களை ஏற்பாடு செய்வதிலும், உளவு பார்ப்பதிலும் இவர் உதவியுள்ளார். பாகிஸ்தான் சிறப்புப் படைகளான SSG-யின் பாரா-கமாண்டோக்கள், போரில் மிகச் சிறப்பாகப் பயிற்சி பெற்றவர்கள். ரகசிய நடவடிக்கைகளில் நிபுணர்கள்.
ராணுவ கமாண்டோ
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையாக்க கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. நவீன ஆயுதங்களை இயக்குவதிலும், கைகோர்த்துப் போரிடுவதிலும் சிறந்த திறன் கொண்டவர்கள். முன்னதாக 2024-ல் கந்தர்பாலில் நடந்த தீவிரவாத தாக்குதலிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக NIA தெரிவித்துள்ளது.
தற்போது, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஏப்ரல் முதல் வாரத்திலேயே பைசரன் புல்வெளி பகுதிக்கு வந்துள்ளனர். பைசரன் புல்வெளியில் தாக்குதல் நடத்தும் முன் அங்குள்ள உணவகத்தில் தீவிரவாதிகள் இருவர் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு சிற்றுண்டி சாப்பிட வந்த சுற்றுலாப் பயணிகளிடம் மதம் குறித்து விசாரித்த பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.