CAA சட்டத்தால் மகிழ்ச்சி..காதலுக்காக சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் கொண்டாட்டம்

Pakistan Uttar Pradesh India Citizenship
By Karthick Mar 12, 2024 05:54 AM GMT
Report

 CAA சட்டம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த பெண் ஒருவர் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளார்.

CAA சட்டம்

குடியுரிமை திருத்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்காளதேசத்து சிறுபான்மையின மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக ஆளும் அரசும்,வலதுசாரிகளுக்கும் வரவேற்கும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பும் அதிகளவில் இருக்கிறது.

pakistan-women-welcomes-caa-act-in-india

அதாவது, சிறுபான்மையினர் என குறிப்பிடும் போது அதில், முஸ்லிமகளை மட்டுமே என சேர்க்கவில்லை என்று தொடர் கேள்விகள் எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்பப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரையில் இலங்கை தமிழர்கள் ஏன் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல் - மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல் - மத்திய அரசு அறிவிப்பு!

கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் பெண்

இந்நிலையில் தான், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் CAA சட்டத்தை வரவேற்று கொண்டாடியுள்ளார். இது குறித்து கையில் தேசிய கொடியுடன் பேசிய ஹைதர் என்ற அப்பெண்,

pakistan-women-welcomes-caa-act-in-india

"நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்... இந்திய அரசாங்கத்தை வாழ்த்துகிறோம். அவர் வாக்குறுதியளித்ததை பிரதமர் மோடி செய்துள்ளார்” என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹைதர் கடந்த ஆண்டு மே மாதம், சமூகவலைத்தளத்தில் மூலம் உண்டான காதலனை கரம் பிடிக்க சட்டவிரோதமாக இந்திய வந்தடைந்துள்ளார்