நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் .. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட முடிவு!
பாகிஸ்தானில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில், பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான்
பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது .அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்று பாகிஸ்தான் அரசு, தனது கரன்சி காகித ரூபாய் நோட்டுகளை பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து காகித கரன்சிகளும் டிசம்பர் மாதத்திற்குள் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் கவர்னர் ஜமீல் அகமது அறிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு
தற்பொழுது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணத்தில் சம்மட்டி அடியை கொடுக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் புதிய நோட்டுகள் ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5,000 ஆகிய மதிப்புகளில் வெளியிடப்படும்.
பழைய நோட்டுகள் 5 ஆண்டுகளுக்கு புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.