நீதிமன்றத்திலே புதுமணப் பெண்ணான மகளை சுட்டுக்கொன்ற தந்தை - பகீர்

Pakistan Marriage Crime
By Sumathi 1 வாரம் முன்

திருமணம் செய்துகொண்ட மகளை நீதிமன்ற வளாகத்திலேயே தந்தை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணம்

பாகிஸ்தான், கராச்சியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தப் பகுதியிலிருந்த மருத்துவர் ஒருவரை விரும்பி, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். இதை எதிர்த்து பெண்ணின் குடும்பத்தார் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றத்திலே புதுமணப் பெண்ணான மகளை சுட்டுக்கொன்ற தந்தை - பகீர் | Pakistan Teenage Girl Shot Dead By Father

இந்நிலையில், பெண்ணுடைய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் நடந்ததா, விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, பாகிஸ்தான் நீதிமன்றத்தில், புதுமணப் பெண் வாக்குமூலம் அளிக்க வந்திருந்தார்.

ஆணவக்கொலை

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த அந்தப் பெண்ணின் தந்தை, தன் மகளை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காவல் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் குற்றவாளியை மடக்கி பிடித்தனர்.

கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 650 ஆணவக்கொலைகள் நடக்கின்றன. பின்னனியில், தந்தை, சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் என யாரோ ஒருவர் இயங்குகின்றனர் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.