சாம்பியன்ஸ் டிராபி..இந்திய அணி பாகிஸ்தான் வரலனா இதுதான் நடக்கும் - பிசிபி மிரட்டல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக நேரிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி
2025ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. சுமார் 8 வருடங்களுக்கு பிறகு இத்தொடர் நடக்கும் நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. இதனிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில்
இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும் தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது.
பாகிஸ்தான்
இதனை பிசிசிஐ , ஐசிசியிடம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இத்தொடரில் பங்கேற்க இந்திய அணிவீரர்கள் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் பாகிஸ்தான் அணி போட்டியை புறக்கணிக்கும் என்று முன்னாள் வீரர் ரஷித் லடிஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ’’இது ஐசிசி தொடர். 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டுவரை ஐசிசி தொடர்களில் அனைத்து அணிகளும் பங்கேற்கும் என கையெழுத்திட்டுள்ளன.
அதனால் அனைத்து அணிகளும் பங்கேற்கும் என நம்பிக்கை அளித்துள்ளன. ஸ்பான்சர்கள் ஒப்பந்தமும் முடிந்துள்ளன. இந்த நிலையில், இந்திய அணி இங்கு வருவதற்கு பாதுகாப்பை மட்டும்தான் காரணமாக கூறுகிறது.
ஆனால், ஆஸ்., தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் இங்கு வருகின்றன. பாகிஸ்தான் அரசு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துவிட்டால் யாருமே ஐசிசி தொடரை பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.