கடவுளின் மனைவியை குறித்து அவதூறு கருத்து; மாணவனுக்கு மரண தண்டனை - நீதிமன்றம் உத்தரவு!
மதக்கடவுள், அவரது மனைவிகளை குறித்து அவதூறு பரப்பிய கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவதூறு கருத்து
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடான பாகிஸ்தானில், இஸ்லாமிய மதக்கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்வது, மற்றும் மத நிந்தனையில் ஈடுப்படும் அந்த நபர் மீது மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாபை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் ஒருவர் இஸ்லாமிய கடவுள் மற்றும் அவரது மனைவியை பற்றி அவதூறு கருத்துகள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
அதை 17 வயது மாணவனும் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பஞ்சாப் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து, இஸ்லாமியர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் அவர்களது மதக்கடவுளை குறித்தும், அவரது மனைவிகள் குறித்தும் தவறான கருத்துக்கள் கொண்ட புகைப்படங்கள், விடியோக்களை வலைத்தளத்தில் பதிர்ந்த 22 வயது மாணவன், 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான 22 வயது மாணவருக்கு மரண தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, அந்த 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.