மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியர் - சாகும்வரை சிறை!
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கேரளா, வழிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மத பாடசாலை ஆசிரியர்(47). இவருக்கு 14வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே, மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
சாகும்வரை சிறை
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு மஞ்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி ராஜேஷ் சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, ரூ.6.60 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.