பாகிஸ்தான் நாட்டில் மிகவும் விலையுயர்ந்த வீடு இதுதான் - எத்தனை கோடி தெரியுமா?
பாகிஸ்தான் நாட்டில் கட்டப்பட்டுள்ள மிகவும் விலையுயர்ந்த வீட்டை பற்றிய தகவல்.
பிரமிக்க வைக்கும் வீடு
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பில்டர் ஒருவர் கவர்ச்சியான வீட்டை உருவாக்கியுள்ளார். இது பாகிஸ்தானில் மிகவும் விலையுயர்ந்த வீடு என்று கூறப்படுகிறது. இந்த வீடு அனைத்து வசதிகளுடன் பிரமிக்க வைக்கும் அழகுடன் திகழ்கிறது.
இங்கு பெரிய புல்வெளி மற்றும் மாளிகையைச் சுற்றி திறந்தவெளியைக் கொண்டுள்ளது. அதை வாங்குபவர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். அதேபோல் ஒரு பரந்த முகப்பு மற்றும் விரிவான தரைப்பரப்பு, பெரிய கேரேஜ் பகுதி,
ரூ.125 கோடி
நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், தியேட்டர், லவுஞ்ச் பகுதி ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஆடம்பர வீடு சுமார் 10 படுக்கையறைகளுடன் அமைந்துள்ளது.
அந்த அறைகள் ஒவ்வொன்றையும் மிக நுட்பமாக கவனம் செலுத்தி பில்டர் காட்டியுள்ளார் . ரூ.125 கோடி மதிப்புடைய இந்த வீட்டை யூடியூப் விலாகர்கள் பலர் பார்வையிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளனர்.