பொருளாதார நெருக்கடி - பிரபல ஹோட்டலை 220 மில்லியன் டாலருக்கு குத்தைகைக்கு விட்ட நாடு!
பாகிஸ்தான் அரசு ரூஸ்வெல்ட் ஹோட்டலை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. அன்றாட வாழ்வின் உணவிற்கே திண்டாடி வருகின்றனர். அரசு பொருளாதார நெருக்கடியை, சரி செய்ய பல்வேறு வேலைகளை செயல்படுத்தியது.
ஆனாலும், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் தவித்து வருகின்றனர். நிவாரண பொருட்கள் வழங்கும் போது, கூட்ட நெரிசலில், சிலர் உயிரிழந்தனர்.
புதிய முடிவு
அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் வெளிநாட்டு பயணங்களை கைவிடுமாறு அந்நாட்டு, பிரதமர் ஷெரீப் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், பொருளாதா நெருக்கடியை சமாளிக்க, அந்நாட்டின் பழமையான ஓட்டலை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது.
அதன்படி, 100 ஆண்டுகள் பழமையான, ஆயிரத்து 250 அறைகள் கொண்ட ரூஸ்வெல்ட் ஓட்டலை, 3 ஆண்டுகள் 220 மில்லியன் டாலருக்கு ( ரூ.1815 கோடி) குத்தகை விடப்பட்டுள்ளது.
இந்த ஓட்டல் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.