2023 உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல் - இதுதான் காரணம்
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் ஆசிய கோப்பையை நடத்த விரும்புவதாகவும், போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினால், இந்தியாவில் நடக்கும் ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நஜாம் சேத்தி, ஆசியா கோப்பை பல அணிகள் பங்கேற்கும் நிகழ்வு என்பதையும், இந்திய அணிக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளது என்பதையும் நஜாம் சேத்தி தெளிவாகக் கூறினார்.
பாகிஸ்தான் விலகல்?
எனவே, இந்த ஆண்டு செப்டம்பரில் பிசிசிஐ தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஆசியா கோப்பைக்கு பிசிசிஐ தனது அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற முடியாவிட்டால்,
பாகிஸ்தானும் (ODI) உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.