டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை - மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான்
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தான் அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர்.
மோசமான சாதனை
இதையடுத்து, முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து 150 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, 2 வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி, 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவரை முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் அடித்த அணி தோல்வியைத் தழுவியதே இல்லை. அந்த சாதனையை படைத்த ஒரே அணியாக பாகிஸ்தான் மாறியுள்ளது.