தண்ணீரால் பதிலடி கொடுத்த இந்தியா - போருக்கு ரெடியாகும் பாகிஸ்தான்
இந்தியாவுடன், பாகிஸ்தான் போருக்கு தயாராகிவிட்டதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான்
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது அரசியல் சட்டப் பிரிவை, 2019ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் அரங்கேறியுள்ள பெரிய பயங்கரவாத தாக்குதல் இது.
இந்த பயங்கரவாதத்தின் தாக்கம், பஹல்காம் மட்டுமல்ல, பல நாட்டு எல்லைகளை தாண்டி எதிரொலிக்கும் என கருதப்படுகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா அறிவித்துள்ள தடைகள், போரை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. முதலாவதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்பது பாகிஸ்தானை பொறுத்தவரை ஒரு அணு ஆயுத தாக்குதலுக்கு நிகரானது.
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், வேளாண்மை தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டு, பாகிஸ்தானின் பொருளாதார கட்டமைப்பே சரிவை சந்திக்கும். நிலத்தடி நீர் இருப்பு பாதிக்கப்படும். நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்படும். பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
போர் முடிவு
கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்படும். பசி, பட்டினி தாண்டவமாடும். முன்னதாக 1971ல் வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தான்-இந்தியா இடையே யுத்தம் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேசம் என்கிற தனி சுதந்திர நாடு உருவானது.
பின் 1972ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வலியுறுத்துகிறது. இரு நாடுகளிடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிசையாக எந்த ஒரு நாடும் மாற்ற முடியாது.
தற்போது இதனை ரத்து செய்வதாக பாகிஸ்தான் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் மூலம், இந்தியாவுடன் யுத்தத்துக்கு தயார் என்கிற நிலைபாட்டில் உள்ளதாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.