இந்தியாவுக்கு புது ஐடியா கொடுத்த பாகிஸ்தான் - வந்தா மட்டும் போதும் - வினோதமா இருக்கே..
பாகிஸ்தானில் இந்திய அணி பங்கேற்பது குறித்து வித்தியாசமான ஐடியா ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி
இந்திய கிரிக்கெட் அணி கடைசியா 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடியது.
இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினைகளின் காரணமாக அதற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதை முற்றிலுமாக தவிர்த்தது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரும் இந்திய அணி விளையாடிய போட்டிகள் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், அடுத்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில்
பாகிஸ்தான் ஐடியா
இதில் இந்திய அணி பங்கேற்க பிசிபி கிரிக்கெட் வாரியம் ஒரு வினோதமான யோசனையை முன் வைத்துள்ளது. பாதுகாப்பு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக இந்தியா விளையாடும் போட்டிகளை லாகூரில் மட்டும் நடத்தலாம்.
அங்கே ஒவ்வொரு போட்டியிலும் விளையாடிய பின் இந்திய அணியை லாகூரிலிருந்து உடனடியாக அருகில் இருக்கும் டெல்லி அல்லது சண்டிகருக்கு திருப்பியனுப்பலாம்.
அதனால் இந்தியா தங்களுடைய போட்டிகளை சொந்த ஊரான டெல்லி அல்லது சண்டிகரில் இருந்து கொண்டே பாகிஸ்தானில் விளையாட முடியும் என பாகிஸ்தான் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இந்த புதிய திட்டம் பற்றிய விரிவான கடிதத்தை பிசிசிஐக்கு பாகிஸ்தான் வாரியம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.