ரோஹித் இதை செய்யலனாலும் இந்தியா வெல்லும் - அனில் கும்ப்ளே உறுதி
ரோஹித் தலைமையில் வீரர்கள் நன்றாக விளையாடுவதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமை
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2023 உலகக் கோப்பையில் அந்த அணுகுமுறையை பின்பற்றிய அவர் பெரும்பாலான போட்டிகளில் சுயநலமின்றி அதிரடியாக விளையாடினார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கும் ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினர்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள அனில் கும்ப்ளே, “டெஸ்ட் போட்டியில் தம்மிடம் உள்ள வீரர்களை நன்றாக பயன்படுத்துவதில் ரோகித் சர்மா புத்திசாலித்தனமானவர். 2 உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் மற்றும் பும்ராவை கொண்டிருப்பதற்கு ரோகித் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனில் கும்ப்ளே புகழாரம்
முதல் அல்லது 80வது ஓவர் உட்பட போட்டியின் எந்த நேரத்தில் பந்தை கொடுத்தாலும் பும்ரா வித்தியாசத்தை ஏற்படுத்துவார். ஜெய்ஸ்வால் போன்ற இளம் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தலைமையில் அவருடைய அதிரடி அணுகுமுறையை பின்பற்றி விளையாடுகிறார்.
சுப்மன் கில் 2வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு சென்று கச்சிதமாக விளையாடுகிறார். கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், விராட் கோலி ஆகியோரும் ரோஹித் தலைமையில் நன்றாக விளையாடுகின்றனர்.
கடந்த இங்கிலாந்து தொடரில் பண்ட், கோலி ஆகியோர் இல்லாத போது 1 – 0 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியிருந்த நிலையில் துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் வெற்றியில் பங்காற்றினர்.
எனவே ரோகித் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில்லை. அவர் பெரிய ரன்களும் அடிக்கவில்லை. ஆனால் தனக்கான வேலையைச் செய்ய தம்முடைய வீரர்களுக்கு அவர் உத்வேகத்தை கொடுத்துள்ளார்” என பாராட்டியுள்ளார்.