சஞ்சு சாம்சனுக்காக சண்டை போட்ட கம்பீர் - ரிஷப் பண்ட்டை காலி செய்த சம்பவம்!
சஞ்சு சம்சனுக்காக கவுதம் கம்பீர் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன்
2020ல் சஞ்சு சாம்சன் தான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என கவுதம் கம்பீர் சமூக வலைதளத்தில் விவாதம் செய்தார்.
அப்போது ரிஷப் பண்ட் இந்திய டி20 அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என கம்பீருடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் 40 பந்துகளில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் தான் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த முதல் சர்வதேச டி20 சதம். இந்தப் போட்டியில் அவர் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்திருந்தார்.
கவுதம் கம்பீர் ஆதரவு
இதற்கு முன் இந்திய டி20 அணியில் அதிக போட்டிகளில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக செயல்பட்ட தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் இதுவரை சதம் அடிக்கவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாகவே கவுதம் கம்பீர் வர்ணனையின் போதும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவே பேசி வந்தார்.
அதன்படி, ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற வாதத்தை உடைத்து, தனக்காக பேசிய கவுதம் கம்பீருக்கு பெருமை தேடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.