பாகிஸ்தானை மோடி தான் ஆள வேண்டும்; கண்ணீர் விட்ட நபர் - வைரல் வீடியோ

Narendra Modi Pakistan India
By Sumathi Feb 24, 2023 05:00 AM GMT
Report

பாகிஸ்தானை மோடி தான் ஆள வேண்டும் என பாகிஸ்தானியர் ஒருவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானை மோடி தான் ஆள வேண்டும்; கண்ணீர் விட்ட நபர் - வைரல் வீடியோ | Pakistan National Praising Indian Pm Modi

அதில், "மோடி மிகவும் சிறந்தவர், அவரது மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள். நரேந்திர மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் தேவைப்பட மாட்டார்கள், (மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர்) ஜெனரல் (பர்வேஸ்) முஷாரப் கூட தேவையில்லை. பிரதமர் மோடியை நாங்கள் விரும்புகிறோம்.

நரேந்திர மோடி

ஏனெனில் அவர் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. நாங்களோ அதில் எங்குமே இல்லை. மோடியின் ஆட்சியில் வாழ நான் தயாராக இருக்கிறேன், மோடி ஒரு பெரிய மனிதர்,

அவர் மோசமான மனிதர் அல்ல, இந்தியர்களுக்கு நியாயமான விலையில் தக்காளி, சிக்கன் கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு வயிராற ணவளிக்க முடியாதபோது, நாம் ஏன் இங்கு பிறந்தோம் என நினைக்க தோன்றுகிறது. மோடியை நமக்குக் கொடுத்து, நம் நாட்டை ஆட்சி செய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என கண்ணீருடன் கூறியுள்ளார்.