2023-2024ம் ஆண்டு பட்ஜெட் குறித்த கருத்தரங்குகள் - பிரதமர் மோடி பங்கேற்பு...!
2023-2024ம் ஆண்டு பட்ஜெட் குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
2023-2024ம் ஆண்டு பட்ஜெட்
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் 2023 - 2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில், அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும், 7.5% வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் வரும் நிதியாண்டிலர் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் வகுக்கலாம்.
கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும், தங்கம், வெள்ளி, வைரம், பித்தாளை, சிகரெட், ரப்பர், ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கும் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் அவை வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி புகழாரம்
இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பலன் தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

பட்ஜெட் தொடர்பான கருத்தரங்குகள்
இந்நிலையில், பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க இன்று முதல் மார்ச் 11ம் தேதி வரை 12 இணையதளவழியில் கருத்தரங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பசுமை வளர்ச்சி, வேளாண், கிராமப்புற வளர்ச்சி, சுற்றுலா, உட்கட்டமைப்பு, சுகாதாரம், மகளிர் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.