இரவு 8 மணிக்கு மேல் குழந்தை பெற முயற்சிக்க கூடாது - அதிர வைத்த அமைச்சரின் கருத்து
இரவு 8 மணிக்கு மேல் குழந்தை பெற முயற்சிக்க கூடாது என்ற அமைச்சரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் நிலையற்ற தன்மை, ஆட்சி மாற்றம் என பல பிரச்சணைகளில் சிக்கியுள்ளது. தொடர்ந்து நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பதாக வேறு கூறப்படுகிறது.

இதற்கு அதிர்ச்சியான தீர்வு ஒன்றை அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அதில், “8 மணிக்கு மேல்எந்த நாடுகளில் எல்லாம் சந்தைகள் மூடப்படுகிறதோ, அந்நாடுகளில் எல்லாம் மக்கள் தொகை அதிகரிப்பு குறைவாகவே இருக்கிறது.
புதிய ஆராய்ச்சியின்படி, இரவு 8 மணிக்கு மேல் குழந்தை பெற முயற்சிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.