ஸ்டாமினா: பல்லிகளை குறிவைக்கும் இளைஞர்கள் - பின்னணி என்ன?

Pakistan
By Sumathi Apr 30, 2023 10:58 AM GMT
Report

இளைஞர்கள் பாலியல் சார்ந்த விஷயங்களுக்காக வினோத வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.

அபிரோடிசியாக்

பாகிஸ்தானில் வயாகரா மாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. சில மருத்துவ காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆண்மையை அதிகரிக்க 'அபிரோடிசியாக்' என்பதைச் சிகிச்சை என்று நம்புகின்றனர்.

ஸ்டாமினா: பல்லிகளை குறிவைக்கும் இளைஞர்கள் - பின்னணி என்ன? | Pakistan Men Aphrodisiac Lizard Oil For Stamina

இதற்காக புதிதாகக் கொல்லப்பட்ட பல்லியில் இருந்து கொழுப்பு பிரித்தெடுக்கப்படுகிறது. பின், அது தேள் எண்ணெய்யில் ஊறவைக்கப்பட்டு, சிவப்பு மசாலா ஒன்றைச் சேர்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வினோத வழிமுறை

இதற்கு பாலியல் உணர்வைத் தூண்டும் மருத்துவ குணங்கள் இருப்பதாக எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. இதன் காரணமாக ஹார்ட்விக் பகுதியில் இருக்கும் ஒருவித பல்லி கடுமையாக வேட்டையாடப்படுகிறது.

பழமைவாத நாட்டில், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. எனவே இதுபோன்ற சிகிச்சை முறைகள் வைரலாகி வருகிறது.