3 மனைவி 60 குழந்தைகள் - 4வது மனைவிக்கு ஸ்கெட்ச் போடும் நபர்!
பாகிஸ்தானியர் ஒருவர் 60வது முறையாக தந்தையான செய்தி மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
60 குழந்தைகள்
பாகிஸ்தான், குவெட்டா நகரின் கிழக்கு பைபாஸ் அருகே வசிக்கும் மருத்துவர் சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி(50). இவர், 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் தனது 60வது குழந்தையை வரவேற்றார். அந்த மகிழ்ச்சியில் திளைத்த அவர்,

இப்போது நான்காவது பெண்ணைத் தேடுகிறார். ஏனெனில் அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மேலும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார். தனது குடும்பத்தினர் அனைவருடன் ஒரே வீட்டில் தங்கவே விரும்புகிறார்.
4வது மனைவி தேவை
இதற்கிடையில், நாட்டில் பணவீக்க அளவு பெரிதும் அதிகரித்துள்ளது கில்ஜியை நிதி ரீதியாக பாதித்தது. "பாகிஸ்தானில், வணிகம் ஸ்தம்பித்துள்ளது. மாவு, நெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உட்பட, உலகம் உட்பட அனைத்து பாகிஸ்தானியர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறோம்," என்று கூறியுள்ளார். இருப்பினும், குடும்பத்தை விரிவுபடுத்தும் தனது எண்ணத்தில் உறுதியான அந்த நபர் தனது குழந்தைகள் மற்றும் மனைவிகளின் செலவுகளைச் சமாளிக்க முடிந்த அனைத்தையும் செய்ய தாயராக இருக்கிறார்.
"அரசாங்கம் எனக்கு ஒரு பஸ் கொடுத்தால், என் குழந்தைகளை பாகிஸ்தானில் உள்ள இடங்களுக்கு எளிதாக அழைத்துச் செல்ல முடியும்," என்று கூறிய அவர், தனது குழந்தைகளை நாடு முழுவதும் அழைத்துச் செல்ல வேண்டும் என கனவு காண்கிறார். இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.