நம்ப வைத்து ஏமாற்றிய 3 பெண்கள்... வேதனையில் புலம்பிய தனுஷ்

Dhanush Vetrimaaran
By Petchi Avudaiappan Apr 30, 2022 10:23 PM GMT
Report

நடிகர் தனுஷ் தன்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கை வைத்தவர்கள் குறித்து பேட்டி ஒன்றில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக வலம் வரும் நடிகர் தனுஷ் கடந்த ஜனவரி மாதம் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தனது மகன்களுடன் பொதுவெளியில் தோன்றி வரும் அவர் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். 

நம்ப வைத்து ஏமாற்றிய 3 பெண்கள்... வேதனையில் புலம்பிய தனுஷ் | Dhanush Speech About Vetrimaaran

கடந்த ஓராண்டில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மீண்டும் பழைய ஃபார்மிற்கு எப்போது திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதனிடையே பேட்டி ஒன்றில் தனுஷ், என்னுடைய வாழ்வில் ரொம்ப ரொம்ப நம்பிக்கை வெச்ச நாலு பேர்ல ஒருத்தர் வெற்றிமாறன் என கூறியுள்ளார். இவர்களில் மீதமுள்ள 3 பேர் பெண்கள். இப்படியான நம்பிக்கையை நான் யார் மேலேயும் வைத்தது இல்லை. ஆனால் அந்த 3 பேரும் என்னை கீழே தள்ளி விட்டுட்டாங்க . என்னோட நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் மட்டும்தான் எனவும் தனுஷ் தெரிவித்துள்ளார். 

என்னை விட பெரிய வெற்றியைப் பார்த்த வெற்றிமாறன் இன்னும் என்னை விட்டு செல்லாமல் இருக்கிறார் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக வடசென்னை-2 படம்  உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.