உலகக்கோப்பையா? வெண்கலக் கிண்ணம் கூட கிடைக்காது - இங்கிலாந்து அதிரடி!
பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ENG vs PAK
2024 டி20 உலகக் கோப்பைக்கு முன், நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி மோதியது. முதல் மற்றும் மூன்றாவது போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டன.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து 183 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் நிலை
நான்காவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. பதிலடிக்கு வந்த இங்கிலாந்து அணி, பில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடி தொடக்கத்தால் எளிதாக வெற்றி பெற்றது.
15 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த தொடர் தோல்வி டி20 உலகக் கோப்பை வாய்ப்புகளுக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரசிகர்கள் இப்படியே போனா, வெண்கலக் கிண்ணம் கூட கிடைக்காது என விமர்சித்து வருகின்றனர்.