உலகில் இதுதான் மிகவும் ஆபத்தான நாடு - பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் பைடன்!

Joe Biden United States of America Pakistan
By Sumathi Oct 15, 2022 01:15 PM GMT
Report

பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அதிபர் ஜோ பைடன் 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

உலகில் இதுதான் மிகவும் ஆபத்தான நாடு - பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் பைடன்! | Pakistan Is The Most Dangerous Country Biden

அமெரிக்காவுக்கு கடும் சவால் அளித்து வரும் சீனாவையும், ரஷ்யாவையும் திட்டித் தீர்த்த ஜோ பைடன், பாகிஸ்தான் குறித்தும் பேசினார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அதிபர் ஜோ பைடன் பேசியதாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

பாகிஸ்தான் 

சீன அதிபர் ஷி ஜின்பிங், தான் விரும்புவதை புரிந்து கொண்டவர். ஆனால், மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. அதை எப்படி கையாள்வது. ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடும் போது, அதை எவ்வாறு கையாள்வது.

எனது எண்ணப்படி, உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.