அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்: " நீதி நிலை நாட்டப்பட்டது ‘’ - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
அல்கொய்தா
இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில் தற்போது மீண்டும் தலை தூக்கி உள்ளனர். அல்கொய்தா இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஜோ பைடன்
ஆனால் நிர்வாகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் வரை தகவலை வெளியிட தாமதப்படுத்தி வருகிறது. அல்-ஜவாஹ்ரி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் ல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
நீதி வழங்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். நீதி வழங்கப்பட்டுள்ளது.
I’m addressing the nation on a successful counterterrorism operation. https://t.co/SgTVaszA3s
— President Biden (@POTUS) August 1, 2022
எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும்என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.