13 வயது குறைவான நபரை திருமணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி!
முன்னாள் கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரிஹாம் கான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக செயல்பட்டு வந்தவர் இம்ரான் கான். 1992 ஆம் ஆண்டு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விலகிய நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகவும் செயல்பட்டிருந்தார்.
தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ரிஹாம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே ஆண்டில் விவாகரத்து செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 49 வயதாகும் ரிஹாம் கான், 36 வயதான மிர்சா பிலால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
3வது திருமணம்
நடிகர் மற்றும் மாடலாக மிர்சா இருக்கும் நிலையில், ரிஹாமுக்கு இது மூன்றாவது திருமணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரிஹாம் கான், சமூக வலைதளங்களில்
இறுதியாக நான் நம்பக்கூடிய ஒரு மனிதரை கண்டுபிடித்தேன் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.