இம்ரான்கான் மனைவிக்கு கொரோனா தொற்றுஉறுதி

corona china pakistan wife imran
By Jon Mar 21, 2021 02:03 PM GMT
Report

சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சீனா தயாரித்த சினோஃபார்ம்’ என்ற கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போட்டுக் கொண்டார். அவர் செலுத்திய 2 நாட்களில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானது.

68 வயதாகும் இம்ரான்கான் அடிக்கடி கூட்டங்கள், அலுவலக ரீதியான சந்திப்புகளில் அதிகாரிகளுடன் பங்கேற்று வந்தார். சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் முகக்கவசம் இன்றி புதிய வீட்டுவசதித் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இதானல் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிரதமருக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லை என தெரிவித்துள்ளார்.