பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

covid19 minister pakistan prime imran
By Jon Mar 21, 2021 01:53 PM GMT
Report

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, எனவே கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த தகவலை பிரதமரின் சிறப்பு உதவியாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இம்ரான் கான் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.