பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைப்பு - எவ்வளவு தெரியுமா..?
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப் படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை
பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் 'ஈத்-அல்-அதா' எனப்படும் பக்ரீத் பண்டிகை வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப் படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
விலை குறைப்பு
அதேபோல் அதிவேக டீசல் (HSD) விலையும் லிட்டருக்கு ரூ.2.33 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தற்போது ரூ.258.16 ஆகவும், ஒரு லிட்டர் அதிவேக டீசல் விலை 267.89 ஆகவும் குறைந்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று முதல் மைலுக்கு வந்துள்ளது. இது அடுத்த 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு அந்நாட்டு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.