சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அலறியடித்த பொதுமக்கள்
சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை சீனாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஷாண்டாக் மாகாணத்தில் உள்ள டெசா நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ தகவலை சீன தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.33 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெசா நகரில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
10 பேர் காயம்
இந்த நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.