நடுவானில் பறந்த விமானம் - ஜன்னலை உடைக்க முயன்ற நபரால் பரபரப்பு!
விமானத்தில் பயணி ஒருவர் சண்டையில் ஈடுபட்டு, ஜன்னலை உடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடுவானில் விமானம்
பாகிஸ்தான் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸின் PK 283 விமானம் ஒன்று பெஷாவரில் இருந்து துபாய் சென்றுகொண்டிருந்தது. அப்போது பயணிகள் இருக்கைகளுக்கு நடுவிலிருந்த இடைவெளியில் பயணி ஒருவர் தொழுகை செய்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அவர் நடக்கும் வழியில் தொழுதுக் கொண்டிருந்ததால், பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். நகரச் சொல்லியும் அவர் அந்த இடத்தை விட்டு விலகாததால், வலுகட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு, அவரது இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.
ஜன்னலை உடைத்த நபர்
இதனால் கோபமடைந்தவர் தன் சட்டையை கழற்றி விவாதத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளார். மேலும் தன் கோபத்தை வெளிப்படுத்த இருக்கைகளை குத்தியும், விமானத்தின் ஜன்னலை உதைத்து உடைக்கவும் முற்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஏவியேஷன் விதிகளின்படி, அந்த பயணி அவரது இருக்கைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் துபாய் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட விமானத்தின் கேப்டன் சம்பவம் குறித்து தகவல் அளித்து,
பரபரப்பு
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. விமானம் துபாய் விமான நிலையத்திற்கு வந்தவுடன் பயணியை பாதுகாப்புப் படையினர் அழைத்து சென்றனர். மேலும் பாகிஸ்தான் இன்டெர்னேஷனல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள்
அந்த பயணி வருங்காலத்தில் விமானத்தில் பயணிக்க தடைவிதித்து, பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.