நான்சி பெலோசி பயணித்த விமானத்தில் இத்தனை சிறப்புகளா ?

United States of America Taiwan
By Irumporai Aug 03, 2022 11:59 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகிலேயே அதிக நபர்களால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற பெருமையை அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பயணம் செய்த போயிங் ட் ஸ்பெர் 19 பெற்றுள்ளது.

இந்த நிலையில் நான்சி பயணம் செய்துள்ள c-40 விமானத்தின் சிறப்புகள் பற்றி தற்போது பார்க்கலாம் :

C-40 என்பது அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் பயணம் செல்லும் போது ஏற்றிச் செல்ல அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு விஐபி போக்குவரத்து விமானமாகும்.

நான்சி பெலோசி பயணித்த விமானத்தில் இத்தனை  சிறப்புகளா ? | Most Plane Is Us Jet That Maybe Carrying Pelosi

மற்ற பயணிகள் விமானம் போல் அல்லாமல் முழு பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த விமானம் பல்வேறு சொகுசு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.  

C-40 கிளிப்பர் போயிங் 737-300 வணிக விமானத்தின் இராணுவமயமாக்கப்பட்ட படைப்பாகும் C-40 கிளிப்பர் போயிங் 2003 இல் முதன்முதலில் அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது

வழக்கமான விமானங்களில் விமானி மட்டுமே தொலை தொடர்பு சாதனங்களோடு தொடர்பில் இருப்பார்கள் ஆனால் இந்த விமானத்தில் பாதுகாப்பான குரல் மற்றும் தரவுத் தொடர்பு உட்பட, இருவழி பிராட்பேண்ட் தரவுத் தொடர்புகளை விமானம் கொண்டுள்ளது.  

இணையம் மற்றும் செயற்கைக்கோள்கள், C-40B கணினி தொழில் நுட்ப அமைப்பை கொண்டது.

அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் இதில் பயணம் செய்வதால் இது ஒரு அலுவலகம் போன்ற அமைப்பில் இருக்கும்

இந்த விமானத்தில் பணியாளர்கள் ஓய்வெடுக்க தனி அறை , பயணம் செய்யும் விஐபிகளுக்கு சிறப்பு வசதிகளுடன் தனி அறை இருக்கும் உறக்க வசதிகளுடன் கூடிய வணிக வகுப்பு இருக்கைகள் ஆகியவை உள்ளன

இதில் 42 முதல் 111 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் C-40 தனித்துவமானது.

விமானத்தின் மற்ற விவரங்கள் :

C-40A பயணிகள் கட்டமைப்பு

நீளம்: 110 அடி 4 அங்குலம் (33.63 மீ)

இறக்கைகள்: 112 அடி 7 அங்குலம் (34.32 மீ)

எரிபொருள் கொள்ளளவு: 6,875 US gal (26,020 l; 5,725 imp gal)

அதிகபட்ச வேகம்: 534 kn (615 mph, 989 km/h)