ஒரே நாளில் 9 பேருக்கு பிறந்தநாள்; குடும்பம் அரிய சாதனை - அதிசயம் ஆனால் உண்மை!
ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்த தினமாம்..
பிறந்தநாள்
பாகிஸ்தான், லர்கானா பகுதியைச் சேர்ந்த தம்பதி அமீர் - குதிஜா. 1991ல் தங்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். சரியாக ஒரு வருடத்தில், திருமண நாள் அன்றே முதல் குழந்தையை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து இவர்களுக்கு வெவ்வேறு ஆண்டுகளில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி குழந்தைகள் பிறந்துள்ளன. இறுதியில், ஒன்பது பேர் கொண்ட இந்த குடும்பத்தில் அனைவருமே ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்தவர்கள் என்பதற்காக, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
உலக சாதனை
இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பிடம் பேசிய அமீர், தாங்கள் இதை திட்டமிட்டு செய்யவில்லை. அனைத்து குழந்தைகளும் இயற்கையாகவே ஒரே நாளில் பிறந்தது. எந்த குழந்தையும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கவில்லை.

இதுவரை சாதாரன நாளாக இருந்த ஆகஸ்ட் 1 எங்கள் குழந்தைகளின் பிறந்த நாளாக மாறியதை அடுத்து அது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
இத்தாலியப் பிரதமருக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை...! வெடித்த சர்ச்சை IBC Tamil