இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது!
அட்டோக் மாவட்டத்தில் சிந்து நதியின் படுகையில் மிகப்பெரிய அளவில் தங்கக் களஞ்சியமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு தங்கம் அகழ்வுத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தியது.
ஆய்வில் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் சிந்து நதியின் படுகையில் மிகப்பெரிய அளவில் தங்கக் களஞ்சியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிந்து நதி இந்தியாவின் இமயமலையிலிருந்து லடாக் வழியாகப் பாகிஸ்தானில் கில்கிட்-பால்டிஸ்தான், கைபர் பக்துன்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் வழியாகப் பாய்கிறது.
பின் கராச்சியில் உள்ள அரபிக் கடலில் கலக்கிறது. இப்படி அடித்து வரும் சிந்து நதிக்கரையில் சுத்தமான மண், தங்கம், பிற கனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது சிந்து நதிக்கரையில் உள்ள 9 பகுதிகளில் தங்கக் கனிமங்களின் படிவுகள் உள்ளனர்.
ஜாக்பாட்
இது குறித்து பாகிஸ்தான் NESPAK மற்றும் கனிமத் துறை பஞ்சாப் இணைந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக NESPAK நிறுவனத்தின் மேலாளர் ஜர்காம் இஷாக் கான் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இது நடந்தால் தங்கம் அகழ்வுத் திட்டம் வெற்றியடைந்தால், பாகிஸ்தானின் தங்க உற்பத்தி அதிகரிக்கும் நாட்டுப் பொருளாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.