தங்கம் விற்கும் விலைக்கு தங்க பாத்திரத்தில் சமையல் - இளம்பெண்ணின் வைரல் வீடியோ!
இளம்பெண் ஒருவர் தங்கப்பாத்திரத்தில் சமையல் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கப்பாத்திரம்
தெற்கு சீனாவின் ஷென்சென் நகரில் பெண் ஒருவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாடிக்கையாளர் ஒருவர், தங்கத்தில் சமையல் பாத்திரம் ஒன்றைச் செய்து தரச் சொல்லியுள்ளார்.
இதனை முதலில் வியப்படைந்த நகைக் கடை உரிமையாளர், வாடிக்கையாளரிடம் சமையல் பாத்திரம் குறித்த விவரத்தைக் கேட்டுள்ளார். அதாவது மார்டல் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்க வாடிக்கையாளர் மாதிரி படத்தைக் காட்டியுள்ளார்.
இளம்பெண்
இது இந்திய மதிப்பில் சுமார் 84 லட்சம் ஆகும். பின்னர் வாடிக்கையாளர் கேட்டதைப் போன்று தங்கப் பாத்திரத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அந்த பாத்திரத்தைக் கண்டு பிரமித்துப் போன நகைக் கடை உரிமையாளர் தங்கப் பாத்திரத்தில் சாப்பிட வேண்டும் என்பது எனது ஆசை வந்துள்ளது.
In Shenzhen, China, a woman used a 1-kilogram pure gold pot, valued at nearly $100,000, to prepare #hotpot . pic.twitter.com/tRtJNNKlE8
— Discover GuangZhou (@Discover_GZ) February 20, 2025
இதனால் வாடிக்கையாளரின் அனுமதி பெற்றுத் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டதுடன் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
