இந்த நிலைமை மோசமாவது இந்தியாவை பாதிக்கும் - ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை

Pakistan Imran Khan India
By Sumathi May 11, 2023 04:23 AM GMT
Report

பாகிஸ்தான் நிலைமை மோசமாகி வருவது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நிலை

ஊழல் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, ரேஞ்சர்ஸ் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் நீதிமன்ற ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலைமை மோசமாவது இந்தியாவை பாதிக்கும் - ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை | Pakistan Dangerous All Countries Farooq Abdullah

இதனால் இம்ரானின் ஆதரவாளர்கள், அந்நாட்டின் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பல இடங்களில் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

பரூக் அப்துல்லா

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறுகையில், 'ஒரு நிலையற்ற பாகிஸ்தான் என்பது நமக்கு ஆபத்தானது. நமது துணை கண்டத்தில் உள்ள நாடு அமைதியுடன் கூடிய நிலையானதாக இருக்க வேண்டும்.

அந்த நாடு நல்லபடியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாகிஸ்தான் நிலைமை மோசமாகி வருவது அனைத்து நாடுகளையும் பாதிக்கும். நமது அண்டை நாட்டினருக்கு சிறப்பான மற்றும் அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.