ஆஸ்திரேலியா வந்து விளையாடும் போது இந்தியாக்கு மட்டும் என்ன? பாக்.வீரர் கொந்தளிப்பு!

Indian Cricket Team Pakistan national cricket team
By Sumathi Aug 31, 2024 08:12 AM GMT
Report

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்தால் என்ன? என பாகிஸ்தான் வீரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொடர் நடக்கவுள்ளது. இதில், இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

ஆஸ்திரேலியா வந்து விளையாடும் போது இந்தியாக்கு மட்டும் என்ன? பாக்.வீரர் கொந்தளிப்பு! | Pakistan Cricketer Slams Indian Cricket Team

ஆனால், பாகிஸ்தான் செல்ல முடியாது என பிசிசிஐ, ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யகுமார் கேட்ச்சை செக் பண்ணிருந்தா நாங்க ஜெயிச்சிருப்போம் - தென்னாப்பிரிக்க வீரர்

சூர்யகுமார் கேட்ச்சை செக் பண்ணிருந்தா நாங்க ஜெயிச்சிருப்போம் - தென்னாப்பிரிக்க வீரர்

பாக்.வீரர் கேள்வி

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்க மறுத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் இதுகுறித்து பேசும்போது, “சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும்.

kamran akmal

ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வந்து விளையாடும் போது இந்திய அணி வந்து விளையாண்டால் என்ன? அரசியலை தள்ளிவைத்துவிட்டு இந்தியா வந்து விளையாட வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு விளையாட செல்ல வேண்டும் என்றால் எங்கள் நாட்டு அரசு அனுமதிக்கிறது.

அதுபோல இந்திய அரசும், இந்திய வீரர்களை வந்து விளையாட அனுமதிக்க வேண்டும். இருநாட்டு அரசுகள் பேசி முடிவெடுத்தால் அது கிரிக்கெட்டுக்கு நன்மையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.