தலையில் தொடர்ந்து பந்து தாக்கி விபரீதம் - ஆஸி. வீரர் 26 வயதிலேயே ஓய்வு?

Sumathi
in கிரிக்கெட்Report this article
ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பந்தால் தாக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வில் பொக்கோஸ்கி
ஆஸ்திரேலியாவில் சிறப்பான போட்டிகள் மூலம் கவனம் ஈர்த்தவர், வில் பொக்கோஸ்கி. தன்னுடைய திறமை காரணமாக 20 வயதில் தேசிய அணியில் விளையாடுவதற்கு இடம்பிடித்த பொக்கோஸ்கி,
22ஆவது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். எதிர்காலத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக வருவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து பந்தால் தாக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓய்வு?
இப்படி, பலமுறை அவர் பந்தால் தாக்கப்பட்டு போட்டியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இந்நிலையில், மருத்துவர்கள் அவரை சோதனை செய்ததில் பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் அவர் இனி விளையாடவே முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் மூளையதிர்ச்சி நோய், அவரது மனதையும் பாதித்துள்ளது. இது, அவரது கிரிக்கெட் பயணத்திற்கு இடையூறாக அமைந்துள்ளது.
கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவர் ஓய்வு பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தற்போது, அவரது கிரிக்கெட் வாழ்க்கை 26 வயதிலேயே முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.