ஐசிசி தலைவரான ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு - வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!
ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷா
பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா. தன்னுடைய கல்லூரியில் தோழியாக இருந்த ரிஷா பட்டேல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
முதன்முதலாக ஜெய்ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக தன்னுடைய பணியை கடந்த 2009ல் தொடங்கினார். தொடர்ந்து, குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளராக கடந்த 2013ல் பதிவு உயர்வு பெற்றார்.
சொத்து மதிப்பு
அதன்பின், 2015ல் பிசிசிஐயின் பொருளாதார குழுவில் உறுப்பினராக சேர்ந்த அவர், 2019ல் பிசிசிஐயின் செயலாளராக பதவி வகித்தார். இதற்கிடையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவராகவும் செயல்பட்டார்.
கிரிக்கெட்டை தாண்டி குசம் பீன்ஸ்வர் என்ற நிறுவனத்தில் 60 சதவீதம் பங்குகளை நிர்வகித்து வருகிறார்.
ஜெய்ஷாவுக்கு சொந்த வீடு, கார் என்ற பல சொத்துக்கள் உள்ளது. இதன்மூலம், ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு சுமார் 124 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.