ICC தலைவராக தேர்வான ஜெய்ஷா - அடுத்த BCCI செயலாளர் யார்?
BCCI செயலாளராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா ICC தலைவராக தேர்ந்த்தேடுக்கப்பட்டுள்ளார்.
ஜெய்ஷா
ஐஐசி தலைவராக இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து இன்றுடன் ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் தேதி நிறைவு பெறும் நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மட்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய பிசிசிஐ செயலாளர்
டிசம்பர் முதல் ஐஐசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய்ஷா இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ஷா ஐஐசி தலைவராக பொறுப்பேற்கும் நிலையில் அவர் தற்போது வகித்து வரும் பிசிசிஐ செயலாளர் பதவி காலி ஆகும். இந்நிலையில் அடுத்த பிசிசிஐ செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள, மறைந்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லீக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது IPL தலைவராக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் தம்பி அருண் துமாலும் இந்த போட்டியில் உள்ளார்.