களத்திலேயே சுருண்டு விழுந்து கிரிக்கெட் வீரர் பலி - அதிர்ச்சி பின்னணி!
வெப்பத்தைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் வீரர் ஒருவர் களத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஜுனைத் ஜாபர் கான்
அடிலெய்டில் உள்ள கிளப் அணிக்காக விளையாடி வந்தவர் ஜுனைத் ஜாபர் கான். கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் கல்லூரி மற்றும் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணி மோதியுள்ளன.
ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணிக்காக ஜாபர் விளையாடியுள்ளார். அப்போது அதீத வெப்பத்தால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் மைதானத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.
வெப்ப பாதிப்பு
ஆனால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது சுமார் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்துள்ளது. ஆனால் விதிகளின் படி வெப்பம் 42°Cஐ தாண்டினால் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும்.
இவர் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், "இது ஒரு பெரிய இழப்பு. அவர் நல்ல மனிதர்.. தாராள மனப்பான்மை கொண்டவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது" எனத் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் வெப்ப அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.