பாலியல் வன்கொடுமை செய்த நபரோடே சிறுமியை அனுப்ப நீதிமன்றம் பகீர் உத்தரவு!
பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியுடன் செல்ல அனுமதித்த நீதிமன்ற தீர்ப்பால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் சண்டா மகாராஜ்(15). இந்து மதத்தைச் சேர்ந்தவரான இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாலை திடீரென சிறுமி சண்டா மாயமானார்.

இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, கராச்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு கிடந்த சிறுமியை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது, சிறுமி தன்னை அதே பகுதியைச் சேர்ந்த ஷமான் மக்சி (26) என்பவர் கடத்திச் சென்று
நீதிமன்ற உத்தரவு
அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் தன்னை முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
ஆனால் அங்கு வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை. தொடர்ந்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை கடத்திய நபரை கைது செய்யவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ இல்லை.
சர்ச்சை
மாறாக, பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் செல்லக்கூடாது என்றும், அவரை பாலியல் வன்கொடுமை செய்து மதமாற்றம் செய்த இளைஞருடன் செல்ல உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, நீதிமன்றத்தில் இருந்த தனது பெற்றோரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அடஹ்ன்பின், உடனே சிறுமி தனது பெற்றோருடன் செல்வதற்கு அனுமதி அளிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குற்றவாளிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.