பாகிஸ்தானுக்கு கோஷம் போட்ட இளைஞர் அடித்து கொலை - அதிர்ச்சி சம்பவம்
பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத்
கர்நாடகா, மங்களூருவில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 10 அணிகள் பங்கேற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடி வந்தனர்.
இந்த போட்டியை ஏராளமான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், பலர் அந்த இளைஞரை அருகில் கிடந்த கட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இளைஞர் கொலை
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது முதுகில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால் உடலின் உள்பகுதியில் ரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.