கோயில் சுவர் இடிந்து 9 பக்தர்கள் பலி; பலர் படுகாயம் - நிவாரணம் அறிவிப்பு
கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவர் விழுந்து விபத்து
ஆந்திரா, சிம்மாச்சலத்தில் அப்பனசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது இரவு 12 மணியை அடுத்து அப்பகுதியில் கனமழை பெய்தது.
அதில் மலை மீது உள்ள 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரிசை மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் இடிந்து, சாமி தரிசன டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
9 பேர் பலி
உடனே அங்கிருந்த மற்ற பக்தர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் விரைந்து செயல்பட்டு இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பக்தர்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு இந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்ததுடன்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 3 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.