கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பலி - கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி தகவல்!

Pakistan Afghanistan Death
By Sumathi Oct 18, 2025 09:07 AM GMT
Report

மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வான்வழி தாக்குதல் 

பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் மொத்தம் எட்டு முதல் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பலி - கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி தகவல்! | Pakistan Airstrike Afghan Cricket Players Dead

அவர்களில் மூவர் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah), மற்றும் ஹாரூன் (ஹாரூன்) ஆவர்.

ஐபிஎல்லில் மும்பை அணிக்கு ஆடுறதா நினைச்சியா? திலக் வர்மாவை சீண்டிய பாகிஸ்தான்!

ஐபிஎல்லில் மும்பை அணிக்கு ஆடுறதா நினைச்சியா? திலக் வர்மாவை சீண்டிய பாகிஸ்தான்!

3 பேர் பலி

அவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்தது. இதுகுறித்து பேசியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த தாக்குதல் கோழைத்தனமானது. மூன்று வீரர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

afghanistan cricket team

இது அமைதி முயற்சிகளுக்கு பெரிய பின்னடைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.