IND vs AUS தொடரை வெல்லப்போவது யார்? கண்டிப்பா இதுதான் நடக்கும் - கிளார்க் கணிப்பு
IND vs AUS தொடரை வெல்லப்போகும் அணி குறித்து கிளார்க் கணித்துள்ளார்.
IND vs AUS
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 19ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கணித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், என்னைக் கேட்டால் இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்பவராக ஒன்று விராட் கோலி இருப்பார். இல்லையென்றால் ரோகித் சர்மா இருப்பார் ஏனென்றால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இதுதான் அவர்களுக்கு கடைசியாக இருக்கும்.
எனவே ஏதேனும் சாதித்து தான் தொடரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் தொடக்க வீரராக களமிறங்குவதை விட நடுவரிசையில் களம் இறங்குவது தான் மிகவும் எளிது.
கிளார்க் கணிப்பு
இதன் காரணமாக ரோகித் சர்மா தொடக்க வீரராக விளையாடுவார் என்பதால் இந்த தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இருக்கின்றது. இதேபோன்று இந்தியா ஆஸ்திரேலியா விளையாட போகும் நேரத்தில் மழை பெய்யுமா என்று எனக்கு தெரியவில்லை.
அப்படி மழை இல்லை என்றால் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றும். இந்த தொடர் கடும் நெருக்கடியாக தான் அமையும். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்பதால் நான் ஆஸ்திரேலியாவுக்கு தான் ஆதரவாக கணிப்பை வெளியிடுவேன்.
ஆனால் நான் அவ்வளவு நம்பிக்கையாக சொல்லவில்லை. எனினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கின்றது என தெரிவித்துள்ளார்.