சிஎஸ்கே அணிக்கு வரும் பிரித்வி ஷா - ஃபிளமிங்குடன் நடந்த சந்திப்பு!
பிரித்வி ஷா, ஸ்டீபன் ஃபிளமிங் முன்னிலையில் பேட்டிங் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பிரித்வி ஷா
2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் பத்தொன்பதாவது தொடர் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக டிசம்பர் மாதம் மினி ஏலம் நடைபெறும்.
இந்நிலையில் சிஎஸ்கே அணி மும்பையை சேர்ந்த அதிரடி துவக்க வீரரான பிரித்வி ஷாவை மினி ஏலத்தில் வாங்கும் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கே முடிவு
ஏனெனில் சில வீரர்களை அழைத்து சிஎஸ்கே நிர்வாகம் சோதனை ஆட்டத்தில் பங்கேற்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் முக்கிய வீரராக பிரித்வி ஷா கலந்து கொண்டு பிளமிங் தலைமையின் கீழ் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
மும்பையை சேர்ந்த பிரித்வி ஷா பார்ம் அவுட் காரணமாகவும், ஒழுக்கமின்மை காரணமாகவும் அங்கிருந்து வெளியேறி, ருதுராஜ் தலைமையின் கீழ் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார்.