எந்த அணியும் செய்யாத சாதனை - ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பாகிஸ்தான்
ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் எந்த அணியும் செய்யாத சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிககள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் டி20 தொடரை 2-0 என்கிற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வென்று இருந்தது. இதனையடுத்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியது.
ஒயிட் வாஸ்
இதில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி போட்டி நேற்று(22.12.2024) நடைபெற்றது. மழையால் 47 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டை இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. 309 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 42 ஓவர்களில் 271 ரன்கள் குவித்து அனைத்து விக்கெடையும் இழந்தது.
இதனால் ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியயது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் ஒரு நாள் போட்டி தொடரில் ஒயிட் வாஸ் செய்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.