பாகிஸ்தானை தோற்கடிக்க மந்திரவாதிகளை வைத்து சூனியம் - இந்தியா மீது வினோத குற்றச்சாட்டு
பாகிஸ்தானை தோற்கடிக்க பிசிசிஐ மந்திரவாதிகளை வைத்து சூனியம் செய்ததாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் தோல்வி
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி, 23ஆம் தேதி துபாயில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அணித்தலும் சொதப்பிய பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
மந்திரவாதிகளை வைத்து சூனியம்
இந்த நிலையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறாமலேயே வெளியேறியது. இதற்கு இந்தியா அணி மந்திரவாதிகளை வைத்து சூனியம் செய்தது தான் காரணம் என பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வினோத குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஒரு பாகிஸ்தான் வீரருக்கு 2 மந்திரவாதிகள் வீதம் 11 பாகிஸ்தான் வீரர்களுக்கும் 22 மந்திரவாதிகளை அழைத்து துபாய் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சூனியம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
22 पंडित बाहर से और तीन पंडित रोहित ,हार्दिक और अय्यर टीम में फिर तो पाकिस्तान को हारना ही था 🤣🤣 pic.twitter.com/zaNsq6PUjW
— Raja Babu (@GaurangBhardwa1) February 24, 2025
மேலும், இந்த மந்திரவாதிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வர முடியாது என்பதால்தான் போட்டியை துபாயில் நடத்த பிசிசிஐ வற்புறுத்தியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஊடகத்தின் இந்த வினோத குற்றச்சாட்டு சமூகவலைத்தளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.