2023 பத்ம விருதுகள்: இருளர் சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்காக பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் சமூக பணிகள் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாம்புபிடி வீரர்கள்
இருவரும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளனர். இயற்கையுடன் இணைந்து வாழும் பாரம்பரிய மக்களான இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த
இவர்கள் இருவரும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றிருப்பது அந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பலரும் பாராட்டி வருகின்றனர்.